பொதுவாக கற்றாழை செடி மருத்துவ குணங்கள் மாத்திரம் கொண்டது என நாம் நினைத்து கொண்டிருப்போம்.

ஆனால் மருத்துவத்தை தாண்டி வாஸ்து சாஸ்திரம் படி, கற்றாழை செடியின் முக்கியத்துவம் பெறுகிறது.

அந்த செடியை சரியான திசையில் வைத்தால் வீட்டிற்குள் எப்போதும் நிலைத்திருக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றார்கள்.

அத்துடன் கற்றாழை செடியை வீட்டில் சரியான திசையில் நட்டால் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கிறது.

அப்படி என்ன நன்மைகள் கற்றாழை செடியால் வீட்டிற்கு வருகின்றது என்பதனை தெரிந்து கொள்வோம்.

மணி பிளாண்ட்டிற்கு டப் கொடுக்கும் கற்றாழை செடி! எந்த திசையில் வைக்க வேண்டும்? | Which Direction Should The Cactus Plant Be Grown1. கற்றாழை செடியினை வீட்டில் வைப்பதால் எதிர்மறை ஆற்றல் வெளியேறி, வீடு முழுவதும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கின்றது.

2. அன்பு, முன்னேற்றம், செல்வம், பதவி உயர்வு, கௌரவம் ஆகியவைகள் தான் மனிதர்களின் வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. இதனை கற்றாழை செடி எமக்கு பெற்று தருகின்றது.

3. வாழ்க்கையில் நிறைய தடங்கள் வருகின்றது. இதனை வீட்டிலிருந்து தடுக்க வேண்டும் என்றால் மணி பிளாண்ட்டை போல் கற்றாழை செடியும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

4. வீட்டில் மேற்கு திசையில் கற்றாழை செடியை நடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது சரியாக செய்தால் பணி முன்னேற்றம் கிடைக்கும்.

5. தென்கிழக்கு திசையிலும் கற்றாழை செடியை நடலாம். இது மன அமைதியை உருவாக்கும்.

6. வீட்டின் கிழக்கு திசையில் கற்றாழை செடியை நட வேண்டும். இது வீட்டிலுள்ளவர்கள் மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்தும்.