பிரபல நடிகையான வனிதா கடந்த ஜூன் 27ஆம் தேதி மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் பெரும் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது.

சூர்யா தேவி என்ற பெண்மணி யூடியூப் பக்கம் ஒன்றின் மூலமாக வனிதாவை நார் நாராக கிழித்து வந்தார். அவருக்கு பின்னணியில் நாஞ்சில் விஜயன் தான் இருக்கிறார் என வனிதா குற்றம் சாட்டியிருந்தார்.

இதனையடுத்து நாஞ்சில் விஜயன் வனிதாவை நேரடியாக தாக்க தொடங்கியுள்ளார். ஏற்கனவே வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அதில் வனிதாவை தாறுமாறாக பேசியிருந்தார்.

இதனையடுத்து தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வனிதா கையில் மது பாட்டிலுடன் ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இது சும்மா டிரெய்லர் தான் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. வனிதாவுடன் இருக்கும் நபர் யார் என்பது குறித்த கேள்வி எழுந்து வருகிறது.

 

View this post on Instagram

இது சும்மா டிரெய்லர் தான்... #Nanjilvijayan #vanithaapologize #vanithavijaykumar

A post shared by Nanjilvijayan (@nanjilvijayan) on Jul 21, 2020 at 10:42pm PDT

 

இதனை பார்த்த நெட்டிசன்கள் பெரும்பாலானோர் இது போன்ற பதிவுகளை பதிவிட்டு உங்கள் தரத்தை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள் என நாஞ்சில் விஜயனுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.