தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்து தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங்கை போலவே இவரும் அனைத்து பிரச்சனைகளையும் சந்தித்து இன்று முன்னணி நடிகராக இடம் பிடித்துள்ளார்.
சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தனுஷ் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமாகி இன்று முன்னணி ஹீரோவாக தடம் பதித்துள்ளார்.
மேலும் இவர் தற்போது தமிழில் நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனரான ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் அயலான் என்ற படத்திலும் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் டாக்டர் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் கனா என்ற திரைப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி வெற்றி கண்டார். அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற இப்படம் தெலுங்கிலும் ரீமேக் ஆகி நல்ல வெற்றியைப் பெற்றது.
இதனையடுத்து தற்போது இப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியில் ஐஸ்வர்யா ராஜேஷாக நடிக்க பிரபல நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
தமிழில் சிவகார்த்திகேயன் கோச்சராக நடித்தது போல இந்தியிலும் கோச்சராக நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.
ரசிகர்களின் ஆசைக்கு இணங்க சிவகார்த்திகேயன் பாலிவுட்டுக்கு பறப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.