நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர நட்சத்திரங்களையும் மாற்றுகின்றன. அப்படி கிரகங்கள் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் தற்போது தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் சூரியன்ஆகஸ்ட் 31 ஆம் திகதி பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்கிறார். சூரியன் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
இருப்பினும் 3 ராசிக்காரர்கள் சூரியனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் அபரிமிதமான நன்மைகளைப் பெறவுள்ளார்கள்.
எந்த ஒரு காரியத்திலும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் நல்ல வெற்றியை காணவுள்ளார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது அற்புதமான பலன்களைத் தரும்.
அத்தோடு திடீர் பண பலன்கள் கிடைக்கும், தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், வாகனம் அல்லது சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது சிறப்பான நன்மைகளைத் தரும்.
எந்த ஒரு காரியத்திலும் நல்ல வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பண ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வணிகர்களுக்கு இந்த சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும். தடைப்பட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிக்க முடியும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது அபரிமிதமான நன்மைகளைத் தரும்.
மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும்.
இக்காலத்தில் எந்த வேலையை செய்தாலும், அதில் வெற்றி கிடைப்பதோடு நல்ல பண ஆதாயமும் கிடைக்கும்.
மொத்தத்தில் இக்காலம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.