பொதுவாக கோடைக்காலங்களில் திடீரென மயக்கம், தலைவலி மற்றும் குமட்டல் ஆகிய பிரச்சினை ஏற்படும்.

இதற்கான முக்கிய காரணம் அவர்களின் உடல் சூடு அதிகரிப்பு தான்.

இந்த பிரச்சினை காய்ச்சலை தவிர சுற்றுச்சூழல், ஹார்மோன்கள் மற்றும் ஒரு சில வாழ்க்கை முறை காரணி ஆகிய காரணங்களால் ஏற்படுகின்றது.

இதன் காரணமாக உடல் சூடு ஏற்பட்டு திடீரென வாந்தி, மயக்கம், குமட்டல் ஆகிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

இவ்வாறு ஏற்படும் போது உடல் சூட்டை குறைப்பதற்கு தேவையான முயற்சிகளை எடுப்பது அவசியம்.

அந்த வகையில் ஆங்கில மருந்து வில்லைகளை எடுக்காமல் எப்படி இயற்கையாக சூட்டை தணிக்கலாம் என பார்க்கலாம்.

எகிறும் சூட்டை தணிக்கும் பானங்கள்.. வீட்டில் செய்வது எப்படி? சூப்பர் ஹெல்த் டிப்ஸ் இதோ!! | Health 5 Juice Reduce Body Heat Headache

1. காலையில் தினமும் இளநீர் குடிக்கலாம். ஏனெனின் இளநீரில் குளிரூட்டும் பண்புகள் இருக்கின்றன. அத்துடன் உடம்பிற்கு தேவையான நீர்ச்சத்தை அளித்து, எலக்ட்ரோலைட்டுகளை இயற்கையான முறையில் சமநிலையில் பராமரிக்கிறது. கோடைக்காலங்களில் இதனை ஒன்று அல்லது இரண்டு வேளைகள் குடிக்கலாம்.

2. உடல் சூட்டை குறைப்பதற்கு மாதுளம் பழத்தின் சாறு குடிக்கலாம். இந்த பழச்சாற்றை குடித்து அடுத்து 10 நிமிடங்களில் உடல் சூடு தணியும் என மருத்துவர்கள் கூறுகிறார். அத்துடன் இதற்கான சான்றுகளும் இருக்கின்றன.

3. பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேத முறைப்படி குளிரூட்டும் பண்பு கொண்ட காய்கறிகளில் பீட்ரூட்டும் ஒன்று. தாது மற்றும் எலக்ட்ரோலைட்டாக செயல்படும் பொட்டாசியத்தின் சிறந்த ஆதாரமாக இருக்கக்கூடிய பீட்ரூட் நமது உடலை குளிர்ச்சியாக வைக்க உதவி செய்கிறது.

4. மாதுளம் போல் சூட்டை தணிக்கும் பழங்களில் பப்பாளியும் ஒன்று. மேலும் ரத்த ஓட்டத்தை சீராக்கி, உடலிலே இருக்கக்கூடிய கழிவுகளை அகற்றுகிறது. அதோடு இது வயிறு தொடர்பான பிரச்சனைகளை சமாளிப்பதற்கு உதவுகிறது. ஆகையால் சூட்டை தணிக்கும் சவாலை பப்பாளி முறியடிக்கின்றன.

5. தர்பூசணி பழத்தை எடுத்து பார்க்கும் போது சிட்ரூலின் என்ற அமினோ அமிலம் கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. இதனை தொடர்ந்து இதில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கின்றது. இதில் ஜீஸ் செய்து குடிப்பதால் உடல் சூட்டுடன் சேர்த்து வலி மற்றும் செரிமான கோளாறு ஆகியவற்றையும் சரிச் செய்கிறது.