பொதுவாகவே திருமணம் என்பது ஆண், பெண் இருவரின் வாழ்க்கையில் நடக்கும் புதிய அத்தியாயம் தான். இந்த புதிய அத்தியாயத்தில் மணமக்கள் சீரும் சிறப்புடன் வாழ காலம் காலமாக பல சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றி திருமணம் நடத்தி வைப்பார்கள்.

அதில் சிலவற்றுக்கு சில காரணங்களையும் வைத்திருப்பார்கள். அதேபோல இந்துக்கள் திருமணம் செய்யும் போது கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு பல சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் செய்வார்கள். அதில் மிக முக்கியமானது மணமகளுக்கு மகன் தாலி கட்டுவது தான்.

திருமணத்தில் மூன்று முடிச்சு போடுவதற்கான காரணம்

தாலி கட்டும் சம்பிரதாயத்திற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கிறது இவ்வாறு தாலிகட்டும் போது மகன் மூன்று முடிச்சு போடுவது வழக்கம் இது எதற்காக என்பது பற்றியும் அதற்கான அர்த்தங்கள் என்னென்ன என்பது பற்றியும் தெரிந்துக் கொள்வோம்.         

திருமணமத்தில் மணமகளுக்கு மணமகன் மூன்று முடிச்சு போட்டு தான் தாலி கட்டுவார் அதற்கு காரணம் விழிப்பு, கனவு, ஆழந்த உறக்கம் எனும் நிலைகளை சொல்லப்படுகிறது.

இதில் பெண்கள் தெய்வீக உணர்வோடு இருக்கவும் எண்ணம், சொல், செயல் போன்றவற்றில் தூய்மையானவளாக இருக்கவும் கடவுள் பக்தி, மதிப்பு, அன்பு என்பவற்றை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது.

திருமணத்தில் மூன்று முடிச்சு போடுவதற்கான காரணம்அதில் முதல் முடிச்சு பிறக்கப் போகும் குழந்தை ஆரோக்கியமாகவும், அறிவாளியாகவும், நல்ல குணங்களோடு பிறக்க வேண்டும் என்று பிரம்மாவையும், சரஸ்வதி தேவியையும் வணங்கி முதல் முடிச்சு கட்டுவார்கள்.

இரண்டாவது முடிச்சு பிறந்த குழந்தை பிறருக்கு உதவி செய்யும் குணத்துடனும், செல்வச் செழிப்புடனும் இருக்க திருமாலையும், லட்சுமி தேவியையும் வணங்கி இரண்டாவது முடிச்சியை கட்டுவார்கள்.

மூன்றாவது முடிச்சியில் குழந்தை வளர்ந்ததும் அநீதி, தீய செயல்கள் என்பவற்றை தட்டிக் கேட்டு தர்மத்தை நிலைநாட்ட துணிச்சலோடு இருக்க சிவபெருமானையும், பார்வதி தேவியையும் வணங்கி மூன்றாவது முடிச்சியை கட்டுவார்கள்.