எதிர்காலத்தில் நடக்கவுள்ள பேரழிவுகள் மற்றும் உலக ஒழுங்குமுறையில் ஏற்படவுள்ள மாற்றங்களை கணித்திருந்த நிலையில் அவற்றில் சில நடந்துள்ளதாகவும் கூறப்படுவதால் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வாங்காவின் கணிப்புகளை பலரும் ஆச்சரியத்துடன் உற்று நோக்குகின்றனர்.
அந்த வகையில் 2023ஆம் ஆண்டு உலகம் முழுமையாக இருளில் மூழ்கும் எனவும், பெரிய நாடொன்று உயிரியல் ஆயுதங்களால் மக்களை தாக்கும் எனவும், சூரிய புயல் அல்லது சூரிய சுனாமி ஏற்படும் என்றும், இது கிரகத்தின் காந்த கவசத்தை கடுமையாக சேதப்படுத்தும் எனவும் கணித்துள்ளமை அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.
அத்துடன் வேற்றுகிரகவாசிகள் (ஏலியன்ஸ்) பூமியைத் தாக்கலாம் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் அதில் இறக்க நேரிடும். அணுமின் நிலையத்தில் ஒரு வெடிப்பு ஏற்படலாம், இதன் காரணமாக நச்சு மேகங்கள் ஆசியா கண்டத்தை மூடிவிடும். இதன் விளைவாக பல நாடுகள் கடுமையான நோய்களால் பாதிக்கப்படும் என அவர் கணித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
2023க்குள் மனிதர்கள் ஆய்வகங்களில் பிறப்பார்கள். இங்கிருந்து மக்களின் தன்மை மற்றும் தோலின் நிறம் தீர்மானிக்கப்படும். இதன் பொருள் என்னவெனில் பிறப்பு செயல்முறை முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என கணித்துள்ளார்.
மற்றொரு கணிப்பில், 2023ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் பல விசித்திரமான கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இவற்றில் ஒன்று ஆபத்தான உயிரியல் ஆயுதமாகவும் இருக்கலாம். அதை பயன்படுத்தினால் பெரிய அளவில் உலகம் பேரழிவை காணலாம் என கூறப்படுகிறது.
2023ஆம் ஆண்டு சோகம் மற்றும் இருள் நிறைந்ததாக இருக்கும். இந்த ஆண்டு பருவமழை பெய்யும். இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும். பல பகுதிகளில் கடுமையான புயல்களும் ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை 2024 இற்கான பாபா வங்காவின் தீர்க்கதரிசனங்களில் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல பேரழிவுகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் புற்றுநோய்க்கான தீர்வு 2024 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படும் என பாபா வங்காவின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024இல் உலகம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்கும் என்றும் பாபா வங்காவின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு குவாண்டம் கணினிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரேம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குறித்த பாபா வங்காவின் கணிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2024ஆம் ஆண்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது சொந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரால் படுகொலை செய்யப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.
பாபா வங்காவின் இந்தக் கணிப்புத் தான் தற்போது எதிர்காலம் குறித்து அறிய ஆர்வம் காட்டுபவர்களை உலுக்கியுள்ளது.
மேலும் ஐரோப்பாவில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும், 2024ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.
அதுமட்டுமின்றி அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2024ஆம் ஆண்டில் மர்ம நோயால் பாதிக்கப்படுவார் என்றும், அது அவரை காது கேளாதவர் ஆக்கும் என்றும் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.
2024ஆம் ஆண்டில் சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும் ஹக்கர்கள் மிகவும் அதிநவீனமாகி, பவர் கிரிட்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளை குறிவைப்பார்கள் என்றும் தனது கணிப்புகளின் மூலம் எச்சரித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் 2024 ஆம் ஆண்டுக்கான தீர்க்கதரிசனங்கள் ருமேனிய ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இன்னும் பல ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கவிருக்கும் சம்பவங்கள் தொடர்பிலும் அவரின் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
2046 காலகட்டத்திற்கு பின்னர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு மக்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உயிருடன் வாழ்வார்கள் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.
2100க்கு பின்னர் பூமியில் இரவு நேரம் என்பதே இருக்காது எனவும், இரவை பகலாக்கும் செயற்கை சூரியன் உருவாக்கப்படும் எனவும் அவர் கணித்துள்ளார்.
மேலும், பூமியின் சுற்றுப்பாதை 2023இல் மாறும் என்றும் விண்வெளி வீரர்கள் 2028ல் வீனஸுக்கு பயணம் மேற்கொள்வார்கள் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.
உலகம் 5079 காலகட்டத்தில் பேரழிவால் முடிவுக்கு வந்துவிடும் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.
இந்த ஆண்டு சில பெரிய வானியல் நிகழ்வுகள் நடக்கலாம். இது மட்டுமன்றி இதன் காரணமாக பூமியின் சுற்றுப்பாதையில் மாற்றம் ஏற்படலாம்.
இது நமது சுற்றுச்சூழலில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். பூமியிலுள்ளவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஏற்கனவே காலநிலை மாற்றத்தினால், மக்கள் கடும் வெப்பம் அனுபவித்து வரும் நிலையில், இந்த கணிப்பு குறித்தும் மக்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.
பல்கேரிய நாஸ்டர்டாமஸ் பாபா வங்கா, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். பல்கேரியாவின் சோபியா பகுதியில் வசித்து வந்த பாபா வங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதி மரணம் அடைந்தார்.
பாபா வங்கா உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது.
இதனால் இவருடைய கணிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் பெற்று வருகின்றன.
குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து, பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்றவை பாபா வங்காவின் கணிப்புகளை நிஜமாக்கியுள்ளன.
இதன் காரணமாக உலகின் பெரும்பாலான மக்கள் இவருடைய கணிப்புகளை உற்று நோக்கி வருகின்றனர்.
2023 ஆம் ஆண்டு குறித்து பாபா வங்கா கூறிய கணிப்புகளும், கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறி வருகிறது. அதன்படி வளர்ந்த நாடு ஒன்று அணு ஆயுத தாக்குதலில் ஈடுபடும் என்று தெரிவித்திருந்தார்.
அதற்கு ஏற்றது போல் ரஷ்ய உக்ரைன் போர் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்து வருவது பாபா வங்காவின் கணிப்போடு ஒத்துப்போகிறது.
அவரது கணிப்புப்படியே பிரிட்டன் ராணியின் மரணமும் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
பாபா வாங்காவின் இந்த கணிப்புகள் எந்த அளவிற்கு உண்மை என்பது எதிர்காலத்தில் தெரியும்.