செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா போன்ற நாடுகள் விண்கலத்தை செலுத்தியுள்ளது. இந்தியா சந்திராயன் விண்கலத்தை ஏவியது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் விண்கலம் கால் பதிப்பதற்கு முன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முயற்சி தோல்வியடைந்தது.

 

கடந்த 20-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பியது. ஜப்பானில் இருந்து இந்த விண்கலம் செயற்கைக்கோள் மூலம் ஏவப்பட்டது.

 

இந்நிலையில் சீனா தியான்வென்-1 என்ற விண்கலத்தை இன்று ஹைனன் தீவில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து ஏவியது. லாங் மார்ச் 5 என்ற சீனாவின் மிகப்பெரிய ராக்கெட் மூலம் ஹைனன் தீவிலிருந்து இன்று ஏவப்பட்டது. 36 நிமிட பயணத்திற்குப் பிறகு புவி-செவ்வாய் மாற்று சுற்றுவட்ட பாதையை அடைந்ததாக சீனா தெரிவித்துள்ளது.

இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தின் மண்ணை ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், ஒரு லேண்டர் மற்றும் ஒரு ரோவர் கருவிகளை கொண்டுள்ளது. இது 5.5 கோடி கிலோ மீட்டரை 7 மாதம் பயணித்து பிப் 2021-ல் செவ்வாய் கிரகத்தை சென்றடையும்.

சீனா ஏற்கனவே 2011-ம் ஆண்டு ரஷ்யாவுடன் இணைந்து செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. தற்போது சொந்தமாக விண்கலத்தை அனுப்பியுள்ளது.