இன்று பல இடங்களில் செல்போன் வெடித்து விபத்து ஏற்படுவதை நாம் அவதானித்து வருகின்றோம். இதற்கான காரணம் நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு தெரிவதில்லை. தற்போது செல்போன் வெடிப்பதற்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ஒரிஜினல் சார்ஜர்களை பயன்படுத்தாமல் மூன்றாம் தரப்பு சார்ஜர் பயன்படுத்துவதை தவிர்க்கவும். பணத்தை சேமிப்பதாக நினைத்து இந்த தவறை செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.

தரமில்லாத பேட்டரி ஸ்மார்ட்ஃபோன் தீ விபத்திற்கு முக்கிய காரணம். மேலும் மூன்றாம் தரப்பு பேட்டரிகளை பயன்படுத்துவதும் தவறாகும். பல ஆண்டுகளாக பயன்படுத்தி செயலதிறன் குறைந்துள்ள பேட்டரியை பயன்படுத்தாமல், புதிதாக மாற்றிவிடவும்.

வீக்கமாக இருக்கும் பேட்டரியை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் இவை ஷார்ட் சர்க்யூட், அதிக வெப்பம் அல்லது கசிவு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மொபைல் போன் தீ பிடிப்பதற்கான காரணம் என்ன? | Phones On Fire Common Reason

படுக்கையறையில் சார்ஜ் போடுவதை தவிர்ப்பதுடன், தலையணை கீழ் செல்போனை வைத்து தூங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் தலையணை அடியில் வைத்து படுத்தால் சூடாகி ஷார்ட் சர்க்யூட் ஏற்படலாம்.

போன் அதிகமாக சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தயாரிப்பாளர்கள் ஸ்மார்ட்போனில் குறிப்பிட்ட வெப்பநிலை வரம்பு வைத்திருப்பார்கள்,  ஆதலால் வரம்பு மீறி வெப்பமாகும் போது செயலிழக்கவும், தீ பிடிக்கவும் காரணமாக அமைகின்றது.

சார்ஜ் போட்டுக்கொண்டே மொபைல் பேசுவது எளிதில் தீப்பிடிக்க முக்கிய காரணமாகும். ஆதலால் சார்ஜ் போடும் போது மொபைலை பயன்படுத்தாதீர்கள்.

போனில் காணப்படும் சிப் ஓவர்லோடு செய்யப்பட்டால் எளிதில் தீப்பிடிக்கவும் செய்யும்.