வல்லாரை கீரையில் பல அற்புத மருத்துவ பலன்கள் நிரம்பியிருக்கிறது. இதில் இரும்புச்சத்து, உயிர்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, தாது உப்புகள் என்பன அதிகமாகவே இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் வல்லாரைக் கீரையானது இரத்தத்தை சுத்திகரித்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. அதனால் பள்ளிக்காலங்களில் குழந்தைகளுக்கு வல்லாரையில் விதம் விதமான உணவுகளை செய்துகொடுப்பார்கள்.

அந்தவகையில், இந்த வல்லாரைக்கீரையில் துவையல் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

மூளையை சுறுசுறுப்பாக ஓட வைக்கும் வல்லாரை கீரை துவையல்

தேவையான பொருட்கள்

வல்லாரைக் கீரை - 1 கட்டு

கடலை பருப்பு - சிறிது

வெங்காயம் - 2

வர மிளகாய் - 2

பச்சை மிளகாய் - 1

தக்காளி - 1

இஞ்சி - சிறிது

பூண்டு - 2 பல்

உப்பு - தேவையான அளவு

மூளையை சுறுசுறுப்பாக ஓட வைக்கும் வல்லாரை கீரை துவையல்

செய்முறை

முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப் பருப்பை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

பிறகு அதில் கடலைப் பருப்பை சேர்த்து வதக்கிய பின்னர் அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, வர மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

பின்னர் வல்லாரைக் கீரையை நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளவும்.

கீரை வதங்கி அரைப்பத்தில் வந்ததும் தக்காளி சேர்த்து தேவையான அளவு உப்பு வதக்கிக் கொள்ளவும்.

கீரை நன்கு வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து எடுத்தால் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை துவையல் தயார்.