பொதுவாகவோ நாம் தினமும் புது புது உணவுகளைத் தேடித் தேடி விரும்பி சாப்பிடுகிறோம்.

ஆனால் முந்தைய காலக்கட்டத்தில் தற்போது இருப்பது போல வசதி இல்லை, ஹோட்டல் இல்லை ஆனால் கிடைக்கும் காய்கறிகளையும் பழங்களையும் இறைச்சிகளையும் உண்டு வந்தார்கள்.

முதலில் பச்சையாக சாப்பிட்டு வந்தவர்கள் பிறகு நெருப்பை மூட்டி சமைத்து சாப்பிட ஆரம்பித்து தற்போது புது புது முறையில் உணவுகளை சமைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி முதன்முறையாக தயாரித்து சுவைக்கப்பட்ட உணவுகள் என்னென்ன என்று தெரியுமா?

உலகின் முதல் முறையாக சுவைக்கப்பட்ட உணவுகள்இந்தப் பட்டியலில் முதலில் இருப்பது ரொட்டி தான் 14,000 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் வசித்து வந்த வேட்டையர்கள் கிளப்ரஷ் எனும் கிழங்குடன் சாப்பிட்டு இருக்கிறார்கள்.

உலகில் பழமையான பாஸ்ட் புட் தான் தமால் என்கிற ஒரு உணவு. இது மெசோ அமெரிக்காவில் போர் படையினர்களுக்கு தயார்ப்படுத்தப்பட்டது.

இயற்கையான சில உணவுகள் தான் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொடுத்திறது அதில் ஒன்றுதான் தேன். தேன் 300 ஆண்டுகளுக்கு உணவாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இது எகிப்தில் இருக்கும் கல்லறையில் தான் கண்டுடெடுக்கப்பட்டிருக்கிறது.

சூப் என்ற ஒன்று நம்மில் சிலருக்கு சாப்பாடிற்கு முன் சாப்பிடும் பழக்கம் இருக்கும். இந்த சூப் புதிது என்றால் நிச்சியம் இல்லை. இது கி.மு 3750 இல் சுமேரிய கியூனிஃபார்ம் கல் சுவடுகளில் பல காய்கறிகளையும், இறைச்சியையும் சேர்த்து செய்யப்பட்டது.

மசாலா பொருட்களை உணவில் சேர்த்தால் உணவின் சுவை இரட்டிப்பாக இருக்கும். இந்த மசாலாப் பொருட்களும் மிக பழமையானது தான். கிட்டத்தட்ட 6000 ஆண்டுகளுக்கு முன்னர் டென்மார், ஜேர்மனியில் வேட்டையாடுபவர்கள் கண்டுப்பிடுத்து பயன்படுத்தினர்.