சருமத்தை அழகுபடுத்துவதற்காக என்னவெல்லாமோ செய்கின்றோம். அந்தவகையில் பாலும் சருமத்தை அழகுபடுத்துவதில் மிகவும் உதவக்கூடியது.
பாலானது உடலை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் வயதான தோற்றத்தை தள்ளிப்போடவும் உதவும்.
இந்த பால் குளியலுக்கு பாலை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்றில்லை. நாம் குளிக்கப் போகும் நீரில் இரண்டு கப் பாலை கலந்தாலே போதும்.
இதற்கு பசும்பாலை பயன்படுத்தினால் இன்னும் சிறந்தது. பாலுடன் தேங்காய் எண்ணெய், ஒலிவ் எண்ணெய், ஓட்ஸ், ரோஜா இதழ்கள் என்பவற்றை கலந்தும் குளிக்கலாம்.
சரி இனி இந்த பால் குளியலினால் என்னென்ன நன்மைகள் இருக்கிறதெனப் பார்ப்போம்...
வயதான தோற்றம் - பாலில் சருமத்தை ஈரப்பதமாக்கும் தன்மை இருப்பதால் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்கும். இது வயதான தோற்றத்தை தள்ளிப்போட உதவும்.
மன அழுத்தம் - வெதுவெதுப்பான நீரில் பால் சேர்த்துக் குளிப்பது, தசைகளையும் மனதையும் தளர்வடையச் செய்ய உதவும். இது மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கும். இது தலைவலி பிரச்சினையையும் போக்க உதவும்.
மென்மையான முடி - பாலை சிறிதளவு எடுத்து தலையில் தடவி 20 நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர் தலைமுடியை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பாலில் இருக்கும் புரதங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்.