இலங்கையில் சற்று முன்னர் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த மூவரும் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2711 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் மேலும் சிலருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 708ஆக பதிவு

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 708 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 4 பேரில் இந்தியாவிலிருந்து வந்த இருவரும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய இருவரும் உள்ளடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த 12 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,035 ஆக பதிவாகியுள்ளது.

அதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு வெளிநாட்டினர் உட்பட 662 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 111 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர் என்பதுடன், இந்த தொற்று காரணமாக இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.