இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ராஜினாமாவை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்றுக் கொண்டதாக அந்நாட்டு அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்த தொடர் போராட்டங்களின் எதிரொலியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 

 

இதற்கிடையே, இலங்கையின் குருங்கலாவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின்மீது போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். ஆளுங்கட்சியினரின் வீடுகளுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

 

இலங்கையில் மறு உத்தரவு வரும் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்படுவதாக இலங்கை ரெயில்வே அறிவித்துள்ளது.

 

இந்நிலையில், இலங்கையில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் தற்போது அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை நாளை காலை 7 மணி வரை நீட்டிப்பு செய்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.