ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலையில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
இந்து மதத்தை பொருத்தவரையில் கிரகங்களில் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக நிகழும் சுக்கிரன் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இது சாஸ்திரங்களின் அடிப்படையில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகின்றது.
அந்த வகையில் 12 ராசிகளும் 27 நட்சத்திங்களும் காணப்படுகின்றது. இதில் உத்திரம் நட்சத்திரமானது 12 ஆவது நட்சத்திரம் ஆகும். சூரிய பகவானே இந்த நட்சத்திரத்துக்கு அதிபதியாக திகழ்கின்றார்.
இந்த சூரியனின் நட்சத்திரத்திற்கு சுக்கிரன் எதிர்வரும் ஆகஸ்ட் 22 ஆம் திகதி இடம்பெயர்ச்சி அடைய போகின்றார்.
அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்ற போதிலும் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப்போகின்றது. அப்படி சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி காரணமாக ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்வில் பல்வேறு வகையிலும் சாதக பலன்கள் கிடைக்கப்போகின்றது.
நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு வெற்றிகரமாக தீர்வு கிடைக்கும்.தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் பணியிடத்தில் இருந்த அழுத்தங்கள் குறைய ஆரம்பிக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றது.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.பல வழிகளில் இருந்தும் வருமானம் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தை பொருத்த வரையில் ரிஷப ராசியினருக்கு ராஜ யோகம் தான்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது பல வெற்றிகளை கொடுக்கப்போகின்றது. இந்த காலப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் எந்த விடயமும் வெற்றியடையும் என்பது உறுதி.
தொழில் செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மேலும் தொழில் ரீதியில் சிறந்த முன்னேற்றம் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. எதிர்பாராத வகையில் பணவரவுகள் அதிகரிக்கும். மொத்தத்தில் இவர்களுக்கு சுக்கிரன் அதிஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப்போகின்றார்.
மீனம்
மீன ராசியினருக்கு இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது பெரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது. வாழ்வில் அசுர வளர்ச்சி ஏற்படப்போகும் காலகட்டமாக இந்த காலகட்டத்தை குறிப்பிடலாம்.
மனரீதியில் ஒரு உச்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் புதிய முயற்ச்சிகளை மேற்டிகொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் தேடி வரும். நிதி நிலையில் உச்சத்தை தொடக்கூடிய ஒரு காலகட்டமாக இருக்கும்.
நீண்ட நாட்களாக வாழ்வில் இருந்து வந்த சகல விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்சி பெருகும்.