கொரோனா தொற்றினால் உயிரிழந்த பிரபல நடிகர் நிதிஷ் வீரா கடைசியாக பேசிய காணொளி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் இந்நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்று பிரபல இயக்குனர் அருண்ராஜாவின் மனைவி சிந்துஜா உயிரிழந்த நிலையில், நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

பல படங்களில் நடித்த இவர் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார்.

இந்நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நிதிஷ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நிதிஷ் கடைசியாக வெளியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.