சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் இந்த வைரஸ் பரவல் தீவிரம் அதிகமாக இருப்பதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வைரஸால் தொடர்ந்து சாதாரண மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் குமரன் தன்னுடைய அப்பா கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரை நான் தான் கவனித்து வருகிறேன்.
விரைவில் உங்களை சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரன் காட்சிகள் சில நாட்களுக்கு ஒளிபரப்பாகாது என கூறப்படுகிறது.