பொதுவாக காய்கறிகள், பழங்கள் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் என பலரும் கூறுவார்கள். அது உண்மையாக இருந்தாலும், பழங்கள் சில நோயாளர்கள் சாப்பிடுவதால் அவர்களின் உயிருக்கே ஆபத்து வரக்கூடும்.

அந்த வகையில், ஆரோக்கியம் நிறைந்த மாதுளம் பழத்தை குறிப்பிட்ட சிலர் சாப்பிடக் கூடாது. ஏனெனின் அது அவர்களின் உடலில் உள்ள நோயை அதிகரிக்கும்.

கண்கவர் நிறத்தில் இருக்கும் மாதுளம் பழத்தை சாப்பிடுவதால் சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றிகள், வைட்டமின்கள் ஆகியன கிடைக்கும். இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

அப்படி இருந்தும் சிலருக்கு மாதுளை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும்.

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது.. உயிருக்கு உலை வைக்கும் மாதுளம் பழம் | Who Should Not Eat Pomegranate

அப்படியாயின், மாதுளம் பழம் சாப்பிடுவதால் யாருக்கெல்லாம் பிரச்சினைகள் ஏற்படும் என்பதை பதிவில் பார்க்கலாம்.  

  1. உடலில் இரத்தம் குறைவாக உள்ளவர்கள் மாதுளம் பழம் நிறைய எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனின் அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் இரத்த நாளங்களை தளர வைக்கும். இதனால் உயர் இரத்த அழுத்தம் குறையும், ஏற்கனவே குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தலைச்சுற்றல், பார்வை மங்கலாகுதல், மற்றும் மயக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. மேலும், மாதுளை பழம் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு நல்லது என்றாலும் இரத்த அழுத்தம் உள்ளிட்டவர்களுக்கு தீமையை கொடுக்கும்.

2. ACE தடுப்பான்கள், ஸ்டேடின்கள், பீட்டா-தடுப்பான்கள் மற்றும் ஆன்டிகோகுலண்டுகள் உள்ளிட்ட மருத்துகள் எடுத்துக் கொள்பவர்கள் மாதுளம் பழம் சாப்பிடக்கூடாது. ஏனெனின் இதிலுள்ள சேர்மங்கள் கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு குடிக்கும் மருத்துகளின் வீரியத்தை குறைக்கும்.

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது.. உயிருக்கு உலை வைக்கும் மாதுளம் பழம் | Who Should Not Eat Pomegranate

3. மாதுளை சாற்றை குடிக்கும் பொழுது CYP3A4 மற்றும் CYP2C9 போன்ற முக்கியமான கல்லீரல் நொதிகள் தடுக்கப்படுகின்றன. சில சமயங்களில் இதய நோயாளிகள் அல்லது நீண்டகால மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு ஆபத்தாக அமையலாம்.

4. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மாதுளை பழம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதே சமயம் அறுவை சிகிச்சை செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்து மாதுளம் பழத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனின் சிகிச்சையின் போது அதிகப்படியான இரத்தப்போக்கை ஏற்படுத்தும். 

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது.. உயிருக்கு உலை வைக்கும் மாதுளம் பழம் | Who Should Not Eat Pomegranate