கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 10 நாட்களுக்குள் பத்தாயிரம் கட்டில்களை வழங்குவதற்கான ஒரு துரித வேலைத்திட்டம் பல இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொவிட் நோயாளர்களுக்கான இந்த கட்டில்களை தயாரிப்பதற்கு நாட்டின் பல நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அம்பாறை மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் தொழில் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த இளம் பெண்களும் இந்த கட்டில்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அந்த இடத்தை பார்வையிட்டார். இந்த மாவட்டத்தில் நான்கு இடங்களில் கட்டில்கள் தயாரிக்கப்படுவதுடன், கொவிட் நோயாளர்களுக்காக 200 கட்டில்களை தயாரித்து வழங்கவுள்ளனர்.

இதேவேளை, அம்பாறை ஹார்டி உயர்கல்வி நிறுவனத்தில் நடாத்தி வரும் கோவிட் 19 மகளிர் விடுதியின் செயல்பாடுகளையும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேற்பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.