தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அந்தவகையில் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-


தமிழகத்தில் 28,967 வெளிமாநிலங்களில் இருந்து வந்த 11 பேர் என மொத்தம் 28,978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

1,46,233 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் தொற்று 28,978 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் 7,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் ஏற்கனவே 7,130 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 7,149 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் மேலும் 232 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,880 ஆக உயர்ந்துள்ளது. அதில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் 134 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 98 பேரும் உயிரிழந்தனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணைநோய்கள் இல்லாத 58 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 66 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனாவில் இருந்து மேலும் 20,904 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 12,40,968 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,52,389 ஆக அதிகரித்துள்ளது. 12 வயதிற்குபட்ட 959 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஏப்ரல் 5-ம் தேதி 128 சிறார்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.