இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.
அந்த வகையில் இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலமாக 1,000 வெண்டிலேட்டர்கள் மற்றும் 3 ஆகிசிஜன் ஜெனரேட்டர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்சிஜன் சிலிண்டர் ஒவ்வொன்றும் ஒரு நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது எனவும், இதன் மூலமாக ஒரே சமயத்தில் 50 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இங்கிலாந்து அரசு சார்பில் கடந்த வாரம் 200 வெண்டிலேட்டர்கள், 495 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
🇮🇳🇬🇧