ஒவ்வொரு ஆண்டும் மே 9-ம் தேதி சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது தாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நாளில், பலரும் தங்கள் தாய்க்கு பரிசுப்பொருட்கள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர், இயற்கையுடன் இணைந்து அன்னையர் தினத்தை கொண்டாடியுள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோவில், கன்றுக்குட்டியை தடவிக்கொடுத்தவாறு இருக்கிறார், அதில் இயற்கையுடன் நம்மை இணைத்துக் கொள்வதே மிக அமைதியான ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவுக்கு லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள், அன்னையர் தினத்தில் கன்றுக்குட்டிக்கு அன்பை காட்டுகிறீர்களே, உண்மையிலேயே நீங்க ஹீரோ தான் என கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.