உணவென்பது மிகவும் தேவையான ஒரு விஷயமாகும் இந்த உணவை நாம் குழந்தைகளுக்கு மிகவும் கவனமாகவும் சத்தானதாகவும் கொடுப்பது மிகவும் முக்கியமாகும்.
குழந்தைகளுக்கு நல்ல உணவை கொடுத்தால் தான் அவர்கள் வளர்ந்து வரும் சமயத்தில் அவர்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்து ஒரு நோயும் வராமல் அரோக்கியமாக இருப்பார்கள்.
ஒரு குழந்தைக்கு 6 மாதங்களுக்கு பின் தாய்ப்பாலை தவிர்த்து உணவு கொடு்கப்படுகிறது. இந்த உணவுகள் எப்படி கொடுக்க வேண்டும்? எதை கொடுக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
6 மாதத்தில் நீங்கள் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது அதன் அளவு 1 லீட்டராக இருக்க வேண்டும்.
இந்த பாலில் இருந்த குழந்தையை மாற்றும் போது தானியங்கள் அல்லது அறைத்த பழம்/காய்கறி போன்ற மென்மையான, அரை திட உணவுகளுடன் மாற்றத்தைத் தொடங்க வேண்டும்.
இதன் பின்னர் இறைச்சி மற்றும் மீன் போன்ற புரதங்களின் சிறிய டீஸ்பூன் அவர்களுக்கு கொடுக்கலாம். இந்த உணவுகளை கொடுக்கும் போது அதை நன்றாக அரைத்து கொடுக்க வேண்டும்.
கரட் வேர்கடலை போன்ற உணவுகளை கொடுக்க கூடாது. இது மூச்சு திணறலை ஏற்படுத்தும்.
நீங்கள் பால் பொருட்களை சிறிய அளவு தயிர் மற்றும் மென்மையான சீஸ் இது போன்ற உணவுகளை தினமும் கொடுத்து வந்தால் அது அவர்களின் ஆரோக்கியத்தில் பங்கெடுக்கும்.