இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரிகளுக்கு தபாலில் அனுப்பப்பட்டுள்ள பரீட்சை அனுமதிப்பத்திரம் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை எனின் http://www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக குறித்த அனுமதிப்பத்திரத்தை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது பரீட்சை இலக்கத்தை பதிவு செய்து குறித்த அனுமதிப்பத்திரத்தை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.