தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வரும் 10-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இன்றும், நாளையும் தனியார் பேருந்துகள் மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலித்தால் 10,000 வரை அபராதம் என்றும் ஆறுமாத சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு தொடரப்படும் என கூறப்பட்டுள்ளது.
கோப்பு படம்.

மேலும், பேரிடர் காலத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.