கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது ஒரு தேசிய முன்னுரிமையாக கருதி நாடு முழுவதும் அவசரகால வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு நிலைங்களை மேம்படுத்துவதற்கான அவசர பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவம், தேவையான உபகரணங்கள் மற்றும் பாகங்களை வழங்குமாறு எந்த நேரத்திலும் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த முக்கியமான தருணத்தில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாபெரும் மனிதாபிமான திட்டங்களுக்கு தானாக முன் வந்து உதவி வழங்க விரும்புவோர், கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் அல்லது இராணுவ தலைமையகத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு வழங்குவது மிகவும் வரவேற்கத்தக்கது.
சில சமூக ஊடகங்களில் ஒரு சிரேஸ்ட அதிகாரியின் பெயர் மற்றும் ஒரு தொலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு இராணுவம் பொது மக்களிடம் இவ்வாறான கோரிக்கைகளை விடுத்திருப்பதாக தவறான செய்தி பரப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் இராணுவம் இதனை தெரிவித்துள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)