விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷன் ஷிவாங்கியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துக்கு அழகான அண்ணன் , தங்கச்சி என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுப்பாளர் ரக்‌ஷன்தான் தொகுத்து வழங்கினார்.

தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம்தான் நிறைவடைந்தது.

இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்‌ஷனும் அதில் கோமாளியாக பங்கேற்ற ஷிவாங்கியும் குக் வித் கோமாளி செட்டுக்கு சென்று இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டு அழகாக ஒரு புகைப்படம் எடுத்து அதை ரக்‌ஷன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்துக்கு ஷிவானி தங்கம்மா என்று கம்மெண்ட் செய்துள்ளார்.

ரக்‌ஷனும் ஷிவாங்கியும் அண்ணன் தங்கைகளாக சேர்ந்து எடுத்துக்கொண்டுள்ள புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், சோ…. சோ… க்யூட்டி அண்ணா தங்கம்” என்று மகிழ்ச்சியாக கம்மெண்ட் செய்து வருகின்றனர்.