ஜோதிட சாஸ்த்திரங்களில் ஒவ்வொரு கிரகங்களின் பெயர்வு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஏனெனின் ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சி நடக்கும் பொழுது அதன் தாக்கம் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் தெரியும்.

அந்த வகையில், நிழல் கிரகம் என அழைக்கப்படும் ராகு பெயர்ச்சியடையும் பொழுது அசுபமான பலன்கள் அதிகமாக இருக்கும். இவர் ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் பொழுது அவர்களின் வாழ்க்கை மற்றவர்களை விட முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

இன்னும் ஒரு மாதத்தில் பிறக்கும் 2026-ல் ராகுவின் மாற்றம் குறிப்பிட்ட சில ராசியினர் வாழ்க்கையில் பாதகமான தாக்கங்களை தரப்போகிறது. இந்த தாக்கங்கள் அடுத்த வருடம் முழுவதும் இருக்கும் என்பதால் ராசியினர் கொஞ்சம் பொறுமையாக இருப்பது அவசியம்.

அப்படியாயின் ஜோதிடத்தின்படி, ராகு பெயர்ச்சியால் 2026-ல் தடைகளை சந்திக்கப் போகும் ராசியினர் யார் யார் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.    

அதிர்ஷ்டத்திற்கு சவால் விடும் ராகு பெயர்ச்சி: 2026ல் இவர்களுக்கு திண்டாட்டம் தான் | Rahu Transit 2026 Efforts Zodiac Signs

ரிஷப ராசியினர் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு பிறக்கப்போகும் 2026-ல் ராகு பெயர்ச்சியால் பாரிய கஷ்டங்கள் வரும். முடிந்தளவு வாயை கவனப்படுத்தி வைத்து கொள்ளுங்கள். உடல்நல பிரச்சினைகள் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது உங்களின் திருமண வாழ்க்கையை பாதிக்கலாம். முடிந்தளவு எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் வேலைச் செய்பவர்களாக இருந்தால் முடிந்தளவு சிக்கல்களை குறைத்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அவசியம் இல்லாத விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு பெயர்ச்சி அடையும் பொழுது கடினமான சூழல் உருவாகும். மன உளைச்சலை தரும் விடயங்களை உங்களை சுற்றி நடக்கும். அதற்கு நீங்கள் பொறுப்பாக முடியாது. அதிலும் குறிப்பாக பெண்கள் நெருங்கிய உறவினர் மீது நம்பிக்கை வைக்காதீர்கள். அவமரியாதை நடக்கும் சமயத்தில் பொறுமையாக இருப்பதே சிறந்தது.
கன்னி ராசியில் பிறந்தவர்கள் கன்னி ராசியில் பிறந்தவர்கள் 2026-ல் சில பிரச்சினைகளை சந்திப்பார்கள். ஆண்டு முழுவதும் தடங்கல் வந்து கொண்டே இருக்கும். இவையெல்லாம் உங்களின் நல்ல மனம் சரிச் செய்து கொள்ளும். முடிந்தளவு அதற்கு எந்தவித பிரச்சினையும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். லாபம் குறைவாக இருக்கிறது என்று தொழில் வெறுப்பு கொள்ளாதீர்கள். ஏனெனின் இழப்பிற்கு பின் ஒரு வெளிச்சம் உள்ளது.