நடிகர் ரஜினிகாந்தின் 168-வது படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கும் இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்னும் ஒரு சில தினங்களில் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை திரும்பும் ரஜினி, அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளார்.

அந்த பணிகள் முடிந்த பின், நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவ பரிசோதனைக்காக அவர் ஜூன் மாதம் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.