சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனைகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.ஏ.சித்திக் ஆகியோர் கூறியதாவது:-
சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனைகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே 12 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 9 மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
இதில் ஒரு பரிசோதனை மையம் தீவுத்திடலில் அமைக்கப்படுகிறது. இந்த பரிசோதனை மையம் 24 மணி நேரமும் செயல்படும். இன்னும் 2 நாட்களில் இந்த மையம் செயல்பட தொடங்கும்.
ஆக்சிஜன் படுக்கை வசதிகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதலாக 2400 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது.
நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்திலும் ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்படுகிறது. உடனடியாக 250 படுக்கைகள் தயாராகி விடும். மேலும் 250 படுக்கைகள் அடுத்த சில நாட்களில் தயாராகிவிடும்.
சென்னையில் 380 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போட ஆஸ்பத்திரிகளுக்கு தான் செல்ல வேண்டும் என்பதில்லை. இந்த மையங்களில் சென்றும் போட்டுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.