கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் நடந்துவரும் சில சம்பவங்கள், மீண்டும் ஆசிய நாட்டவர்கள் மீதான வெறுப்பு அதிகரித்துள்ளதோ என எண்ணத்தூண்டுகிறது.

அட்லான்டாவில், ஒருவர் ஆறு ஆசிய பெண்களை சுட்டுக்கொன்ற சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.

முன்னாள் நியூயார்க் செனேட்டரான Daniel Patrick Moynihanஇன் மகளான Maura Moynihan என்பவர், ஆசிய நாட்டவரான ஒரு பெண்ணை உன் நாட்டுக்குத் திரும்பிப்போ என்று கூறி கெட்ட வார்த்தையால் திட்டும் ஒரு வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தன்னை வம்புக்கிழுத்த ஒருவருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் ஒரு ஆசிய பெண்மணி.

Xiao Zhen Xie (76) என்ற ஆசிய நாட்டவரான பெண்மணி, சான் பிரான்சிஸ்கோவில் சாலையைக் கடப்பதற்காக நின்றுகொண்டிருந்திருக்கிறார். அப்போது பெயர் வெளியிடப்படாத 39 வயது நபர் ஒருவர் திடீரென Xiaoவின் முகத்தில் குத்தியிருக்கிறார்.

அந்த நபர் குத்தியதில் கண்ணில் காயம்படவே, கோபத்தில் பக்கத்தில் கிடந்த கட்டை ஒன்றை எடுத்து அவரை வெளுத்துவாங்கிவிட்டார் Xiao.

அந்த நபரை Xiao சாத்திய சாத்தில், பொலிசார் அவரை ஸ்ட்ரெச்சர் ஒன்றில் வைத்து தூக்கிச் செல்ல, அப்போதும் ஆதங்கம் தாங்காமல், ஏய் நான் சும்மாதானே நின்றேன், என்னை ஏன் வம்புக்கிழுக்கிறாய் என கோபமும் அழுகையுமாக Xiao கதறும் காட்சியைப் பார்க்கும்போது, அவர் எந்த அளவுக்கு மன வேதனைப்பட்டிருப்பார் என்பதை நன்றாக புரிந்துகொள்ளமுடியும்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், பொலிசார் Xiaoவை தடுத்திருக்கவில்லை என்றால், இன்னும் சரியாக அந்த நபரை அடி வெளுத்து வாங்கியிருப்பார் Xiao.