சோலி சொராப்ஜி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக 1989-90 மற்றும் 1998-2004 ஆகிய காலகட்டங்களில் பணியாற்றினார்.

மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி (வயது 91). இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலையில் காலமானார். கொரோனாவால் அவர் இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சோலி சொராப்ஜி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக (அட்டர்னி ஜெனரல்) 1989-90 மற்றும் 1998-2004 ஆகிய காலகட்டங்களில் பணியாற்றினார். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பது தொடர்பாக பல வழக்குகளில் வாதாடியவர்.

மனித உரிமை வழக்கறிஞரான சொராப்ஜி, 1997-ல் நைஜீரியாவிற்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.