தமிழ் பிக்பாஸின் நான்கு சீசன்களிலிருந்தும் பிரபலமான நபர்கள் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு சுற்றுகள் மூலம் தங்களின் நடன திறமையை வெளியிடுவர்.
ஒவ்வொரு வாரமும் நடன ஜோடிகள் சில தலைப்புகள் மற்றும் தீம்களில் பல்வேறு நடன சுற்றுகளில் போட்டியிடுவர். நடுவர்களாக பிரபல நட்சத்திரங்கள் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் இடம்பெறுகிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் ஜோடிகளின் நடன மற்றும் அவர்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு வாரம் ஒரு ஜோடி வெளியேற்றப்பட்டு இறுதியில் 4 ஜோடிகள் பிரம்மாண்ட மேடையில் இறுதிப்போட்டியில் பங்குபெறுவர்.
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்போர் விவரம்:
1.ஷிவானி - சோம் சேகர்
2.கேபிரியல்லா - ஆஜீத்
3.அனிதா - ஷாரிக்
4.நிஷா - தாடி பாலாஜி
5.வனிதா - சுரேஷ் சக்ரவர்த்தி
6.சம்யுக்தா - ஜித்தன் ரமேஷ்
7.ஜூலி - சென்றாயன்
8.பாத்திமா பாபு - மோகன் வைத்யா ஆகியோர் நடனமாடுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை மற்றும் ஈரோடு மகேஷ் மற்றும் தீனா தொகுத்து வழங்குகிறார்கள்.