இந்த சீசனிலும் தோனி நேற்றுவரை சோபிக்கவில்லை. ஒன்று களமிறங்கமாட்டார். இல்லை இறங்கினால் உருட்டுவார். அப்படியிருக்கையில் நேற்று தன் பழைய வேகத்தைக் களத்தில் கொஞ்சம் காட்டினார். வெறும் 17 ரன்கள்தான் அடித்தார். இருந்தாலும், ஏன் தோனியின் மீது நம்பிக்கை கொள்ளவேண்டும்?
2020 ஐ.பி.எல், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் யாரும் எதிர்பாராத ஒன்று. முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது யெல்லோ ஆர்மி. தொடக்கத்தில் ஏற்பட்ட சரிவுகளால் ஏழாம் இடமே பிடித்தது. பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அத்தனை ஏரியாவிலும் சொதப்பியது. இந்த சீசன், சிக்கலாய் இருந்த ஒவ்வொரு பாக்ஸையும் டிக் செய்துகொண்டிருக்கிறது. பழைய சூப்பர் கிங்ஸ் முழுமையாக திரும்பிவிட்டதா... இந்த வீடியோவில் அலசுவோம்.
கடந்த ஆண்டு கடைசி 3 போட்டிகளில் சிறப்பாக ஆடிய ருத்துராஜ் கெய்க்வாட், இந்த சீசனின் முதல் 3 போட்டிகளில் தடுமாறினார். பழையபடி சொதப்புகிறாரோ என்று நினைக்கையில், நேற்று கொல்கத்தா பௌலர்களைப் பந்தாடினார். 42 பந்துகளில் 64 ரன்கள் குவித்து சிறந்த தொடக்கம் கொடுத்தார் அவர். கம்மின்ஸ் பந்தில் அவர் அடித்த முதல் பௌண்டரி பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது. ஆனால், இந்த ரன்களும், அந்த அழகிய ஷாட்களையும் விட, அவரைப் பாராட்ட மிகமுக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. அது என்ன?
தோனி, போன சீசன் ஒவ்வொரு ரசிகரையும் ரத்தக்கண்ணீர் வடிக்கவிட்டார். 'இது தோனியா' என்று ஒவ்வொருவரும் புலம்பினார்கள். அவ்வளவு மோசமாக இருந்தது அவரது ஃபார்ம். இந்த சீசனிலும் இதுவரை சோபிக்கவில்லை. ஒன்று களமிறங்கமாட்டார். இல்லை இறங்கினால் உருட்டுவார். அப்படியிருக்கையில் நேற்று தன் பழைய வேகத்தைக் களத்தில் கொஞ்சம் காட்டினார். வெறும் 17 ரன்கள்தான் அடித்தார். இருந்தாலும், ஏன் தோனியின் மீது நம்பிக்கை கொள்ளவேண்டும்?