முருங்கைக்காயை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, விறைப்புத்தன்மை குறைபாடு, விரைவில் விந்து வெளியேறுதல், மலட்டுத்தன்மை போன்ற அத்தனை பிரச்சனைகளும் தீருகின்றன.
தேவையான பொருட்கள்
- முருங்கைக்காய் - 4
- சின்ன வெங்காயம் - 50 கிராம்
- தக்காளி - 1
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - தேவையான அளவு
- எண்ணெய் - தேவைக்கேற்ப
- உப்பு - தேவைக்கேற்ப
மசாலா அரைக்க :
- தேங்காய் துருவல் - தேவையானஅளவு
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 10
- காய்ந்த மிளகாய் - 7
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை
- முருங்கைக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
- வெங்காயம், தக்காளியை பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
- மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
- குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
- தக்காளி குழைய வதங்கியதும் முருங்கைக்காய், அரைத்த மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வைக்கவும்.
- ஈசியான முருங்கைகாய் மசாலா தயார்.
- இதே முறையில் முருங்கைக்காய்க்கு பதிலாக கத்தரிக்காய் சேர்த்தும் செய்யலாம்.