ரயில்களில் மோதி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 

நேற்றைய தினம் (19) மூன்று இடங்களில் ரயிலில் மோதி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

பூஸ்ஸ மற்றும் கிங்தொட இடையேயான ரயில் பாதையில் 60 வயது நபர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். 

இதேவேளை, புத்தளம் பகுதியில் இருந்து கொழும்புக்கு பயணித்த ரயிலில் மோதி 71 வயது நபரொருவர் உயிரிழந்துள்ளார். 

இதற்கிடையில், ஹபராதுவை பொலிஸ் பிரிவின் தல்பே, மிஹீரிபென்ன பகுதியில் ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். 

ஹபராதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.