நகர பகுதிகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி நாய்களால் தொற்று நோய் பரவும் அச்சுறுத்தல் நிலவுவதாக இரத்தினபுரி பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இவை நகரின் குப்பைத் தொட்டிகள் வீதியோரங்கள் கடைத் தெருக்களில் நடுவீதிகளில் நகரின் மூலை முடுக்குகளிலெல்லாம் நடமாடுவதால் இந்த அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளதாக இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே இவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும் என அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
பிராணிகளிடம் ஜீவகாருண்யம் காட்டப்படல் வேண்டும் ஆனால் அது மனித நலன்களை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் கையாளப்பட வேண்டும் எனவும் இவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இவ்வாறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நிதி ஒதுக்கப்படாமையால் இந்நிலைமை மோசமடைவதற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.