கொரோனா வைரஸால் ஏற்பட்ட சிக்கல்களால் பல மாதங்கள் தீவிர சிகிச்சையில் இருந்த பிராட்வே மற்றும் தொலைக்காட்சி நடிகர் நிக் கோர்டோ உயிரிழந்துள்ளார்.

41 வயதான நிக் கோர்டரோ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) லொஸ் ஏஞ்சல்ஸில் உயிரிழந்தார் என்று அவரது மனைவி அமண்டா க்ளூட்ஸ் இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்

தனது கணவர் 95 நாட்களாக கொவிட்-19 உடன் போராடி வந்ததாக அவர் கூறினார். மேலும் கணவரின் இழப்பு குறித்து மனைவி அமண்டா க்ளூட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘அவர் இல்லாமல் எங்கள் வாழ்க்கையை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாததால் என் இதயம் உடைந்துவிட்டது’ என பதிவிட்டுள்ளார்.

நடிகர் நிக் கோர்டோ செப்சிஸ் நோய்த்தொற்றுகள் மற்றும் மினி-பக்கவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் இரத்த உறைவு காரணமாக அவரது வலது கால் துண்டிக்கப்பட்டது.

புல்லட்ஸ் ஓவர் பிராட்வேயில் நடித்ததற்காக கோர்டரோ, டோனி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். வெயிட்ரஸ் மற்றும் எ பிராங்க்ஸ் டேல் ஆகிய படங்களிலும் அவர் நடித்திருந்தார்.

41 வயதான நடிகர் நிக் கோர்டோ ஹாமில்டனில் வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.