மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி சுமார் 15 மாணவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (25) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த வேளையில் புரக்மோர் பகுதியில் வைத்து இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகி மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடும் பாதிப்புக்கு உள்ளான 4 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதாரவைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ஏனைய 11 மாணவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.