1,510 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளுடன் வெலிகடை சிறைக் காவலர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவின் விஷ போதைப்பொருள் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

வெலிகடை சிறைச்சாலையின் கைதி ஒருவர் மற்றும் சந்தேகநபர் ஒருவர் வெலிசர லய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்களின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுபடுத்தப்பட்டிருந்த போதே குறித்த சிறைக்காவலர் கஞ்சான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரான சிறைக்காவலருக்கு எதிராக சிறைச்சாலை திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பணிநீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.