கடந்த 24 மணித்தியாளங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவர்களுள் இருவர் இதற்கு முன்னர் ஏற்பட்ட விபத்துகளினால் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் நேற்று (23) மாலை அலவ்வ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு - குருணாகல் வீதியில் இடம்பெற்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கொழும்பில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தில் 49 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை ஜாஎல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

டிப்பர் ரக வாகனம் ஒன்று சைக்கிள் ஒன்றுடன் மோதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் வாகரை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மோட்டர் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்ததில் மோட்டர் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றவர் உயிரிழந்துள்ளார்.