மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தர வகுப்புக்களும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தர வகுப்புக்களையும் ஆரம்பிப்பதற்கான அனுமதியை வழங்க தீர்மானித்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண அரச பாடசாலைகளில் 5,11,13 தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
ஏனைய தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.