ஒருவரது எதிர்காலத்தை கணிக்கும் சக்தி ஜோதிடத்தை தவிர்த்து எண் கணிதத்திற்கு உள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த எண் கணிதத்தின்படி, ஒருவரின் பிறந்த திகதியை வைத்து அவரின் எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம் உள்ளிட்ட பல விஷயங்களை அறியலாம்.

2024 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கப்போகிறது என்பதனை எண் கணிதத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் எண் கணிதம்படி, ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த திகதியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. எண் 1

Numerology: இந்த திகதியில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதம் முழுவதும் எப்படி இருக்க போகிறார்கள் தெரியுமா? | August 2024 Monthly Numerology Predictions

ஆகஸ்ட் மாதத்தில் 1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் எண் 1 ஆக இருப்பார்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். நீங்கள் போடும் திட்டங்கள் நல்ல முடிவுகளாக இருக்கும். காதல் வாழ்க்கை மோசமாக உள்ளது என நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த மாதம் செழித்து வாழ்வார்கள்.

2. எண் 2

2, 11, 20, 29 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் எண் 2 ஆக இருப்பார்கள். இவர்கள் இந்த மாதத்தில் வேலையில் முன்னேற்றம் அடையவார்கள். உங்களின் வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்ற நோக்கம் இந்த மாதம் உங்களிடம் இருக்கும். ஆவணங்களில் கையெழுத்து போடும் போது நன்கு படித்து பார்த்து கையெழுத்து போடவும்.

Numerology: இந்த திகதியில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதம் முழுவதும் எப்படி இருக்க போகிறார்கள் தெரியுமா? | August 2024 Monthly Numerology Predictions

3. எண் 3

3, 12, 21, 30 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 3 ஆக இருக்கும். இவர்கள் பணிச் செய்யும் இடங்களில் புகழ் இருக்கும். சமூகத்தில் நல்ல மரியாதையுடன் இருப்பார்கள். எந்த வேலை செய்தாலும் புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். நிதி ரீதியாக சற்று மோசமாக இருக்கும். செலவுகள் கைமீறிப் போகும். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம். இறுதி மாதம் சரியாகி விடும்.   

Numerology: இந்த திகதியில் பிறந்தவர்கள் ஆகஸ்ட் மாதம் முழுவதும் எப்படி இருக்க போகிறார்கள் தெரியுமா? | August 2024 Monthly Numerology Predictions