Kavin About Justice for Jayapriya : புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பற்றி திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சாத்தான் குளத்தில் நடந்த இரட்டை கொலை அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத மக்களுக்கு இது ஒரு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் கவின் இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் இன்னும் எத்தனை ஹாஸ்டேக் தான் போடணும்? இன்னும் எத்தனை நியாயம் கேட்கணும்? இன்னும் எவ்வளோ போராடணும்? அந்த குழந்தை மாஸ்க் எல்லாம் போட்டு சிரிச்சிட்டு இருக்கு. இன்னொரு போட்டோவ பார்க்கவே முடியல. நல்லா இருப்பீங்களடா நீங்க எல்லாம்? ஒரு குழந்தையை கற்பழித்து கொல்றத விட பெரிய தப்பு என்ன இருக்க முடியும்? பொண்ண பெத்தவன் எல்லாம் பயப்படுற மாதிரி இந்த தப்பெல்லாம் செய்கிறவன் பயப்படணும். அதுக்காச்சும் ஒரு சட்டம் பிறக்கக் கூடாதா என பதிவிட்டுள்ளார்.