வட அயர்லாந்தில் தொடர்ந்து இரண்டு வீடுகளில் மூன்று மரணங்கள் நிகழ்ந்த வழக்கில், உயிரிழந்தவர்களின் புகைப்படங்களும், வழக்கு குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன.

Newtownabbey என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பொலிசார் அங்கு விரைந்தனர்.

அங்கு ஒரு பெண் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில், மருத்துவ உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பயன் தராமல், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதே பகுதியிலுள்ள மற்றொரு வீட்டில் ஒரு ஆண் சுயநினைவின்றிக் கிடப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அங்கும் பொலிசார் சென்றனர்.

அவருக்கும் மருத்துவ உதவிக்குழுவினர் கொடுத்த முதல் உதவி பலன் தராமல், அவரும் உயிரிழந்தார்.

அந்த வீட்டை பொலிசார் ஆராய்ந்தபோது, அங்கு ஒரு பெண் இறந்துகிடப்பது தெரியவந்தது.

இப்படி தொடர்ந்து இரண்டு வீடுகளில் மூன்று உயிரிழப்புகள் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பொலிசார் சந்தேகப்பட்டபடியே, இரண்டு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என தெரியவந்துள்ளது.

நடந்தது என்னவென்றால், அளவுக்கு மீறிய போதைப்பழக்கம் கொண்டவரான Ken Flanagan, தன் தாயான Karen McCleanஐக் கத்தியால் குத்தியிருக்கிறார்.

குத்துப்பட்ட Karen, நான் செத்துக்கொண்டிருக்கிறேன், என் மகன்தான் அதற்கு காரணம் என கத்தியபடியே உயிரை விட்டுள்ளார். அவரது அலறலை அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

தாயை கொன்றுவிட்டு, மற்றொரு வீட்டிலிருந்த தன் காதலியான Stacey Knellஐத் தேடிச் சென்ற Ken, அவரையும் கத்தியால் குத்திவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பொலிசார் செல்லும்போது உயிருக்கு போராடிக்கொண்டிருந்த Kenஐ காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல், அவரும் உயிரிழந்துள்ளார்.

அவர் ஏன் அப்படி செய்தார் என்பதற்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருப்பதாக தாங்கள் கருதவில்லை என பொலிசார் தெரிவித்துவிட்டார்கள்.

ஒரே பகுதியில் நடந்த இந்த இரட்டைக் கொலை அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.