ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் ஆளுமை மற்றும் அவர்களின் குணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருக்க விரும்புகின்றனர். அப்படிப்பட் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் புதனால் ஆளப்படுகின்றார்கள் இது தகவல் தொடர்புடன் தொடர்புடைய கிரகம் என்பதால் அதன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் எப்போதும் கலகலப்பாக பேசும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தனுசு
தனுசு ராயியினர் பிறப்பிலேயே அதிக கற்பனை வலம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் எதையாது பற்றி பேசிக்கொண்டே இருக்க ஆசைப்படுவார்கள். ஒரு விடயத்தை பற்றி வர்ணித்து கூறும் ஆற்றல் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும்.
துலாம்
துலா ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் அதிகமாக தங்களை பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ள நினைப்பார்கள். இதனால் இவர்கள் எப்போதும் கலகலப்பான முகத்துடன் உரையாடும் திறனை பெற்றுள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த ராசியினருக்கு பேசுவதில் தான் அதிக மகிழ்ச்சி இருக்கின்றது.