உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்தை கடந்தது. 3 லட்சத்து 43 ஆயிரம் பேர் பலி - அதிரும் உலக நாடுகள் கோப்பு படம் ஜெனீவா: உலகம் முழுவதும் 213 நாடுகள்/பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனாவால் ஏற்படும் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்தை கடந்தது. தற்போதைய நிலவரப்படி, 54 லட்சத்து 1 ஆயிரத்து 612 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 28 லட்சத்து 10 ஆயிரத்து 657 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்து 562 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22 லட்சத்து 47 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 43 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 98,683

பிரேசில் - 22,013

ஸ்பெயின் - 28,678

இங்கிலாந்து - 36,675

இத்தாலி - 32,735

பிரான்ஸ் - 28,332

ஜெர்மனி - 8,366

ஈரான் - 7,359

கனடா - 6,355

மெக்சிகோ - 7,179

பெல்ஜியம் - 9,237

நெதர்லாந்து - 5,811