அமெரிக்காவின் Florida மாகாணத்தில் உள்ள Miamiயில், நாய்களுடன் தகாதமுறையில் உறவுகொண்டு, அதனை படம்பிடிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்த கால்நடை மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Prentiss Madden எனும் 40 வயதான இவர் கடந்த மார்ச் 16-ஆம் திகதி கைது செய்யப்பட்டர்.
Aventuraவில் உள்ள Caring Hands விலங்கு மருத்துவமனையின் மருத்துவ இயக்குநராக Madden உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு file sharing இணையதளத்தில் நாய்களுடனான தனது ஆபாச படங்களை பகிர்ந்ததையடுத்து, இவர் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இவர் தனது கிட்டத்தட்ட 1,600 குழந்தைகள் ஆபாச படங்களை வைத்திருந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், அவர் சமீபத்தில் ஒரு 15 வயது சிறுவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டது குறித்து ஒருவருக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் பல குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறார்.
புதன்கிழமை, Madden நீதிமன்றத்தில் ஆஜரானார், தற்போது மியாமியின் கூட்டாட்சி தடுப்பு மையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது சிறுவர் ஆபாசத்தை வைத்திருத்தல், சிறுவர் ஆபாசத்தைப் பெறுதல் மற்றும் விலங்கு துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.