புது வருடத்தில் அடியெடுத்து வைக்க போகும் அனைவரும் 2023 ஆம் ஆண்டுடன் நமக்கு வந்த கஷ்டங்களும் இல்லாமல் போக வேண்டும் என பிராத்தனை செய்து கொள்வோம்.
மேலும் 2024 ல் வருடத்தில் நட்சத்திரம், ராசிக்கான பலன்கள் இப்படியான விடயங்களை தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வமும் காட்டுவோம்.
இந்த வருடம் பிறக்கும் போது சில ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் பூரணமாக கிடைக்கப்போகிறது. இதனால் குறிப்பிட்ட 3 ராசிகளின் ஆதிக்கம் ராஜயோகமாக மாறும் என கூறப்படுகின்றது.
அப்படியாயின் 2024 ல் ராஜயோகம் பெறும் 3 ராசிக்காரர்கள் பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்.
1. மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் அருளால் அதிர்ஷ்டம் நிறைந்த பயணத்தை துவங்க உள்ளனர். நீண்ட நாள் காத்திருந்த இலக்குகளையும் அடைவதற்கான நேரம் வந்து விட்டது.
அத்துடன் சமூக அங்கீகரிப்பு, பணி முன்னேற்றம், , ஆரோக்கியம் இவை மூன்றிலும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் கிடைக்கும். மேலும் நிதி வாய்ப்புகள் மற்றும் தனிப்பட்ட செல்வத்தின் எழுச்சியை எதிர்பார்க்கலாம்.
2. ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களின் முக்கிய லட்சியங்கள் 2024 ல் நிறைவேறப் போகின்றன. கிரக நிலைகளின் மாற்றங்களினால் இலக்குகள் அடுத்த ஆண்டு நிறைவேறும்.
தொழில், நற்பெயர் மற்றும் இமேஜ் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செய்து கொண்டிருக்கும் தொழில் வளர்ச்சியில் கண்ட கனவு நிறைவேறப்போகிறது. வாய்ப்புகள் திறக்கப்படுகின்றன. இதனால் ஆன்லைன் வணிகத்தைத் தொடங்க நினைத்தால் துவங்கலாம்.
3. மிதுனம்
இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு அறிவுசார் தூண்டுதலுக்கான விருந்து கிடைக்கப்போகிறது. லட்சுமி தேவியின் அருளால், உங்களின் செல்வாக்கு மற்றும் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும்.
2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக குருபகவான் மிதுன ராசிக்குள் நுழைவதால், மே 25-க்குப் பின்னர் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.
மேலும் எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் மற்றும் முன்னேற்றம் வாழ்க்கையில் வரவிருக்கின்றது. நீண்ட கால பலன்களை உறுதியளிக்கும் அறிவுசார் நோக்கங்களை வளரும்.