தமிழகத்தில் நேற்று 604 ஆண்கள், 385 பெண்கள் என மொத்தம் 989 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 394 பேரும், செங்கல்பட்டில் 86 பேரும், கோவையில் 77 பேரும், திருவள்ளூரில் 71 பேரும், குறைந்தபட்சமாக கள்ளக்குறிச்சி, திருப்பத்தூரில் தலா ஒருவரும் நேற்று பாதிக்கப்பட்டு உள்ளனர். சிவகங்கை, பெரம்பலூரில் நேற்று ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 63 ஆயிரத்து 363 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

 


இந்நிலையில் தஞ்சையில் உள்ள பள்ளியில் மேலும் 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியார் பள்ளியில் பயிலும் 21 மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளியில் 6 மாணவிகளுக்கு என 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே 7 பள்ளிகளில் 68 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.